Log inskip to content

Archive for November, 2009

பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட அழைப்பு - வீ. ஆனந்தசங்கரி தலைவர்- த.வி.கூ

Thursday, November 19th, 2009

சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்துவரும் கஷ்டங்களுக்கு இதுவரை தற்காலிக நிவாரணமோ, நிரந்தரத் தீர்வோ கிட்டாமல் காலத்துக்குக் காலம் நற் சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை போட்டு வந்தமைiயை கவனத்திற்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் அடிப்படை கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்தும் முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகளை மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு என தமிழர் விடுதலைக் கூட்டணி உணர்கின்றது. (more…)

ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது! - வீ.ஆனந்தசங்கரி

Thursday, November 19th, 2009

“ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது. எனவே இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்கு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே பொருத்தமானதாகும்”. - ஆனந்தசங்கரி

“ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது” என தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கருதி பொது நிலைப்பாடு ஒன்றை வலியுறுத்தும் முகமாக தமிழர் விடுதலை கூட்டணி சில தீர்மானங்களை வெளியிட்டுள்ளது.

கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரியின் கையொப்பத்துடன் கூடிய மேற்படித் தீர்மான அறிக்கையிலேயே அவர் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை அடைய முடியாது. எனவே இனப்பிரச்சினையின் நிரந்தர தீர்வுக்கு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே பொருத்தமானதாகும்.

இதன் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் அவர்கள் முன்னர் வாழ்ந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்பட வேண்டும். (more…)

Anandasangaree defamation case:Express Newspapers barred from appeal

Thursday, November 19th, 2009

Courtesy: Daily News
Wasantha Ramanayake

The Supreme Court yesterday refused Express Newspapers Ltd leave to appeal from a judgement from the Civil Appeal Court.

Appellant-defendants Express Newspapers Ltd, Veerakesari illustrated weekly Editor S. Nadaraja and V. Warja appealed against the judgement of the Provincial Civil Appeal Court that affirmed the judgement of the District Court awarding Rs. 50 million to TULF Leader V. Anandasangaree.

They sought to set aside the judgement of the Civil Appeal Court.

TULF Leader V. Anandasangaree filed the defamation case in the District Court claiming 10 million rupees damages from the respondent-defendants.

Anandasangaree sued the appellant-defendants for an article published in the Veerakesari illustrated weekly dated April 8, 2004 was malicious and defamatory of him.

The Bench comprised Chief Justice Asoka de Silva, Justice Jagath Balapatabendi and Justice P.A. Ratanayake PC.

http://www.dailynews.lk/2009/11/19/news22.asp