Archive for December, 2007
Sunday, December 30th, 2007
Sun, 2007-12-30 08:07
Colombo, 30 December, (Asiantribune.com): The Tamil United Front has expressed its strongest condemnation on the brutal assassination of Benazir Bhutto of Pakistan.
In a statement released to the press, V. Anandasangaree, President of the Tamil United Front said, “The Tamil United Liberation Front very strongly condemns the brutal assassination of Madam Banazir Bhutto. The hopes of the people of Pakistan to return to democracy have been shattered.” (more…)
Posted in Media, News in Brief | No Comments »
Saturday, December 29th, 2007
இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சியை நோக்கிச் செல்லாது: இலங்கைத் தமிழ் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் நம்பிக்கை
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாண இலங்கை அரசாங்கம் முயற்சித்துவரும் நிலையில் ஒற்றையாட்சித் தீர்வைநோக்கிச் செல்லாதென இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். (more…)
Posted in Media, News in Brief, Tamil | No Comments »
Saturday, December 29th, 2007
Courtesy: Uthayan; Jaffna
Posted on : Sat Dec 29 9:10:00 2007
இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலான தீர்வு எதற்கும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கமாட்டாது. அத்தகைய தீர்வு முன்வைக்கப்படுவதை அது ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது. இந்தியாவின் நிலைப்பாடு இதுவே என்று பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் கோடி காட்டியுள்ளார். புதுடில்லிக்கு விஜயம்செய்திருக்கும் இக்கூட்டணியின் தலைவர்களிடம் அவர் இதனைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாதன்அணியின்) தலைவர் ரி.சிறிதரன் ஆகியோர் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசுவதற்காக இந்தியா சென்றுள்ளனர்.
அந்தவகையில் வரிசையில் முக்கூட்டணித் தலைவர்கள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் சந்தித்துப் பேசினர். அப்போது இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க சுயாட்சியை வழங்குவது அவசியமென இந்தியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் நாராயணன் நினைவுபடுத்தியிருக்கின்றார்.
இந்தியாவிற்கான தமது ஆறு நாள் விஜயத்தின் போது முக்கூட்டுத் தலைவர்கள் நிதியமைச்சர் பி. சிதம்பரம்,வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்துள்ளனர். (more…)
Posted in Media, News in Brief, Tamil | No Comments »
Friday, December 28th, 2007
New Delhi, Dec 28 - India has told a group of Tamil politicians from Sri Lanka that it hopes Colombo will not go for a unitary system of governance when it unveils a power sharing formula to end the ethnic conflict.
National Security Adviser M.K. Narayanan told the delegation here Thursday that India had repeatedly told Sri Lankan leaders that it was vital to grant substantial autonomy to the island’s Tamil areas, informed sources told IANS.
Narayanan conveyed the Indian government views to V. Anandasangaree, D. Sitharthan and T. Sritharan just before they ended a six-day visit to New Delhi where they met senior officials and opinion makers. (more…)
Posted in Media, News in Brief | No Comments »
Friday, December 28th, 2007
PRESS RELEASE.
The Tamil United Liberation Front very strongly condemns the brutal assassination of Madam Banazir Bhutto. The hopes of the people of Pakistan to return to democracy have been shattered. There are a few blood thirsty men in every country who want to keep their people under their subjugation without any justification. More than these ruthless terrorist those who condon their activities and glorify them, should themselves change their attitude towards terrorism without waiting for anyone in their families to suffer the same fate as that of Benazir’s and such others. (more…)
Posted in Media, News in Brief | No Comments »
Friday, December 28th, 2007
திருமதி பெனாசிர் பூட்டோ அவர்களின் மிருகத்தனமான படுகொலையை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இக்கொலை ஜனநாயகத்திற்கு திரும்பும் மகிழ்ச்சியுடன் காத்திருந்த பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ளது (more…)
Posted in Media, News in Brief, Tamil | No Comments »
Thursday, December 27th, 2007
தமிழ்க்கட்சிகளின் தலைவர்களான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் பொதுச்செயலர் தி.ஸ்ரீPதரன், முன்னாள் வடக்குகிழக்கு மாகாண முதல்வர் வரதராஜபெருமாள் மற்றும் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இன்று புதுடில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அவர்களைச் சந்தித்துள்ளனர். (more…)
Posted in Media, News in Brief, Tamil | No Comments »
Thursday, December 27th, 2007
Courtesy: Uthayan; Jaffna
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்டகால அனுபவம் நெருக்கமான தொடர்புகள் என்பவற்றைப் பேணி வந்த இந்தியா மீண்டும் இலங்கை விடயத்தில் தலையிட்டு நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு உதவிபுரியவேண்டும் என இந்திய அரசியல் தலைவர்களிடம் தமிழ் அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
புதுடில்லிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யும் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்தித்துகலந்துரை யாடியுள்ளனர்.
புதுடில்லிக்கு சென்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடு தலை கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி. ஆர்.எல்.எவ் பத்மநாபா)யின் தலை வர் ரி.ஸ்ரீதரன் ஆகியோரே இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். (more…)
Posted in Media, News in Brief, Tamil | No Comments »
Wednesday, December 26th, 2007
புதுடில்லிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடந்த இரு தினங்களில் அங்குள்ள முக்கிய அரசியல்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அவலநிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப். -பத்மநாபா)யின் தலைவர் ரி. ஸ்ரீதரன் ஆகியோரே இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவலநிலைமை குறித்து அங்குள்ள உயர்மட்டத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக சென்றுள்ளனர். (more…)
Posted in Media, News in Brief, Tamil | No Comments »
Wednesday, December 26th, 2007
புதுடில்லிக்கு விஜமொன்றை மேற்கொண்டிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமையும் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய மத்திய அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர்மேனன் ஆகியோரையே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
புதுடில்லிக்கு சென்றுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.- பத்மநாபா)யின் தலைவர் ரி.ஷ்ரீதரன் ஆகியோரே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
http://www.neruppu.com/?p=2857
Posted in Media, News in Brief, Tamil | No Comments »