Thursday, April 27th, 2006
The LTTE has become so weak that it now wants a communal riot to save face,said President of the Tamil United Liberation Front (TULF),V. Anandasangaree, in a statement issued in the aftermath of an LTTE suicide attack targeting Army Commander Lt. Gen. Sarath Fonseka.
Commenting on certain media he said like the LTTE for these media any massacre by the Tigers was a brave deed while any retaliation is the work of the Sinhalese thugs.
“The country must realise that Tamils of the North and East who had settled down to live with the Sinhala people are those who wanted to run away from the LTTE and they live in the South with the Sinhala and Muslim people like brothers and sisters. Whatever happens the Sinhala people and the security forces in particular must show restraint and treat the Tamils living with them with sympathy and protect them,” the TULF leader further said. (more…)
Posted in Media, Statements | No Comments »
Saturday, April 15th, 2006
அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட கொண்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதொன்றாகும். இதற்குப் பொறுப்பானவர்கள் பொதுமக்கள், சர்வதேச சமூகம், ஆகியோரின் பொறுமையை மேலும் சோதிக்காது இத்தகைய வன்செயல்களை உடனடியாக நிறுத்தவேண்டும். உண்மையாக நடைபெற்ற சம்பவங்களை ஊடகங்கள் எடுத்துக்கூறாதது வருத்தத்திற்கு உரிய விடயமாகும். சில ஊடகங்கள் இத்தகைய சம்பவங்களை மூடி மறைப்பதும் ஏனைய சிலவற்றைக் கண்டிப்பதும் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணுவதாகும்.
சித்திரைப்புதுவருடம் தமிழ் சிங்கள சமூகங்களுக்கு முக்கியமான பொதுக்கொண்டாட்டமாகும். இதனை உற்சாகத்துடனும் பல எதிர்பார்ப்புகளுடனும் நாடுதழுவிய அளவில் இருசாராரும் கொண்டாடுவார்கள். திருகோணமலையில் வன்முறைச்சம்பவத்தை தூண்டிவிட்டவர்கள் பொதுமக்களைப்பற்றி கடுகளவேனும் சிந்தித்துப்பார்க்கவில்லை. திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அண்மையில் மூன்று குண்டுகள் வெடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இச்சம்பவத்திற்கு முன்பு அண்மையிலுள்ள இராணுவச்சோதனைச்சாவடிமீது வீசப்பட்ட குண்டு ஒரு இராணுவ வீரர் உட்பட ஐந்து சிங்கள அப்பாவி பொதுமக்களின் உயிரையும் பலிகொண்டதோடு பல சிங்கள மக்களும் படுகாயமடைந்தனர்கள். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் 19ற்குமேற்பட்டபொதுமக்கள் பலிகொள்ளப்பட்டதோடு 45 பேர்வரை காயமடைந்தனர். அத்துடன் தமிழ்மக்கள் பலரது வியாபார நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
மூளையற்ற ஒருநபரின் முட்டாள்தனமான செயலால் பல அப்பாவி மக்களது உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் பெருமளவு பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. உயிர்களை இச்சம்பவத்தில் பலிகொடுத்த குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளையில் மிருகத்தனமான இவ்வன்முறைச்சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொருவரிடமும் இருந்து எழும்பும்; கேள்வி யாதெனில சிங்கள மக்களின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் யாரென்பதும் கும்புறுப்பிட்டியாவில் இரு பொலிஸ்காரரின் உயிரைப் பலிகொண்டதும் மேலும் இரு பொலிசாரைக் காயமுறச் செய்த சம்பவமும் யாரால் ஏற்பட்டது என்பதாகும். சிங்கள மக்களின் கொலைகள் தமிழ்ஊடகங்களால் ஏன் கண்டிக்கப்படவில்லை என்கிற கேள்வியினை ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் கேட்கின்றனர். ஒருவர் சிங்களவரோ தமிழரோ இஸ்லாமியரோ அல்லது வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் ஒருவரின் உயிரைப் பறிக்கின்ற உரிமை எவருக்கும் கிடையாது.
நாட்டுமக்கள் அனைவரது உயிரையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுடையதே. தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் விடுதலைப்புலிகளுக்கும் அதே பொறுப்பு உரியதாகும். அரசும் புலிகளும் தமக்கிடையே காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொதுமக்களை பலிகொள்ளுவதென்பது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. மேற்படி வன்முறைச்சம்பவங்கள் மற்றும் வடக்கு கிழக்கில் ஏற்பட்டுவரும் கொலைகள் ஆகியவற்றினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதட்டநிலையையும் உருவாக்கியுள்ளது. திருகோணமலை மூவின மக்களும் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகையால் சிறு சம்பவங்கள்கூட மக்களின் உணர்வுகளைத்தூண்டி விஸ்வரூபம் எடுக்கக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடும். ஆகையால் அங்கே வாழும் மக்களின் செயற்பாடுகள் அனைத்தும் சிந்தித்து மிகவும் அவதானமாக எடுக்கபடவேண்டியதொன்றாகும். நாடுதளுவிய ரீதியில் வகுப்புக் கலவரத்தை தூண்டக்;கூடிய சதிவலையில் அரசும் பல்வேறு சமூகங்களும் விழுந்து விடாதவாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அமைதிதேடி தென்னிலங்கையில் வாழும்தமிழ்மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் அரசும் பெரும்பான்மையின மக்களும் உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
இதேவேளை இனக்கலவரங்களைத் தூண்டக்கூடிய வகையில் எந்த சக்தியையும் செயற்படவிடாது தடுக்க வேண்டுமென இந்தியப்பிரதமர் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டமை திருகோணமலையில் வாழும் மூவின மக்களுக்கும் நாட்டில் வாழுகின்ற ஏனைய மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமைந்திருப்பது திருப்தி அளிக்கின்றது.
15 April 2006
www.thenee.com
Posted in Media, Statements, Tamil | No Comments »