Log inskip to content

4 March 2013

பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: ஆனந்தசங்கரி

courtesy:www.asrilanka.com

படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்;ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://asrilanka.com/2013/03/04/15455

1 February 2013

காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு உதயம்!

அரசியல் பின்னணிகள் இன்றி சுயாதீனமாக இயங்க முடிவு:-கிளிநொச்சியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது. இந்த அமைப்பின் அங்குராபர்ணக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று (01.02.13) இலங்கைநேரம் 10.30ற்கு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இருந்து தெரிவித்துள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88183/language/ta-IN/article.aspx

இந்த வேளையில் கூட்டம் நடைபெற இருந்த பகுதியை அடைந்த படையினர் மிரட்டும்பாணியில் அங்கு ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்ட பலரது ஆள் அடையாள அட்டை விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கலந்து கொண்ட 200 வரையிலான காணாமல் போனோரின் உறவினர்களில் சிலர் சற்று பயந்து கலங்கிய போதும் பெரும்பாளானவர்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் எதற்கும் தயார் என தம்முள் பேசிக்கொண்டனர்.

இதேவேளை தெற்கின் மனித உரிமை ஆர்வலரின் பேருதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு எந்த அரசியல் பின்னணிகளும் இன்றி சுயமாக இயங்கும் என இதன் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லோருடமும் அலைந்து தாம் விட்ட கண்ணீருக்கு உரிய தீர்வுகள் கிடைக்காத நிலையில் தெற்கின் மனித உரிமை பாதுகாவலர்களில் ஒருவர் தமது துயர்துடைக்க உதவிகளை புரிந்திருக்கிறார் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் கூட்டத்தை நடத்த இடம் கொடுப்பதற்கு எல்லோருமே அஞ்சிய நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தனது அலுவலகத்தை நிபந்தனையின்றி வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ இலங்கையின் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என கூறியது குறித்து கடுமையான விசனங்களைக் கொண்டுள்ள சரணடைந்த மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சொந்தங்களை தேடிக் கண்டு பிடிக்கப் போராடப் போவதாக உறுதி எடுத்துள்ளனர்.

4 பிள்ளைகள் காணாமல் போன நிலையில் தனியே வாடும் ஒருதாய், 3 பிள்ளைகளைகள் காணாமல் போய் தனியே தேடி அலையும் தாய் என சுமக்க முடியாத சோகங்களை சுமந்த பலர் அங்கே கண்ணீரை விட்டு தமது துயர்களைக் கூறியபடி இருந்தனர்.

முல்லைத் தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட உறவினர்களை தேடி அலையும் 200 வரையிலானவர்களில் அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தத் தெரிவிலே தாமாக முன்வந்து தமது பெயர்களை கொடுத்த கானாமல் போனோரின் உறவினர்களில் ஒரு தாய் கூறினார் எல்லோரும் சேர்ந்து தேடுவோம் எனது பிள்ளை கிடைக்காவிடினும் மற்றயவர்களின் பிள்ளைகள் கிடைத்தாலும் அவர்களும் எங்கள் பிள்ளைகள் தானே எனக் கூறியது பலரையும் துயரங்களுக்கு உள்ளாக்கியது.

இன்றய (01.02.13) ஒன்று கூடலில் கலந்து கொண்டவர்களில் 22 பேர் தமது கண்முன்னே படையினரிடம் சரணடைந்த தமது உறவினர்களின் விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.

இன்று (01.02.13) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பிரதி மாதம்தோறும் ஒன்று கூடுவதாகவும் சரணடைந்து மற்றும் காணாமல் போனோரை தேடுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும், சர்வதேசத்திற்கு தமது பிரச்சனைகளை கொண்டு செல்ல உள்ளதாகவும் உறுதியெடுத்துள்ளது.

வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்பட உள்ள இந்த அமைப்பிடம் காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தபின் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை ஒப்படைக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

24 January 2013

இருண்ட ஒரு எதிர்காலத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகின்றோமா? - வீ.ஆனந்தசங்கரி

“நீதி நிலைப்பதாக தோன்றவேண்டுமானால் இராணுவம் புலிகள் என்ற பெயரில் வேட்டையாடுவதை நிறுத்தி உடனடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்; விடுதலை செய்ய வேண்டும். எதுவித மருத்துவ உதவியும் அளிக்காது கொடூரமான முறையில் கைவிடப்பட்டு மரணித்த, எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி ஏழைப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தடுப்பிலுள்ள வேறுஎவருக்கும் ஏற்படக்கூடாது. இப் பெண்ணின்; மரணத்துக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரியொருவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவராவார். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா?” - வீ.ஆனந்தசங்கரி

மேலும் 1400 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் கைது செய்யபட உள்ளார்கள் என்ற
இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன். இக்கூற்றில் எதுவித உண்மையிருப்பின் இதுவரை தாம் கைது செய்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்பதையும், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும், முகாம்களிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை போன்ற சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை தரமுடியுமா? முடியாத பட்சத்தில் இக்கூற்று கேலிக்குரியதாகும். ஒரு மணித்தியால பயிற்சியை விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்றிருந்தால்கூட அந்த இளைஞர்களும், யுவதிகளும் சரணடைய வேண்டுமென்றும் சிறு விசாரணையின் பினனர்; அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு சரணடைந்த அனைவரும் விடுதலைப்புலி போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று நான் அடிக்கடி கூறி வந்திருக்கின்றேன். அத்தகையவர்களில் அநேகர் மிக சொற்ப பயிற்சி அல்லது எதுவித பயிற்சியும் எடுக்காது பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாகும். அவர்களில் அநேகர் மேற்படிப்பை தொடர தகுதியுடையவர்கள் மட்டுமல்ல கல்வியை தொடர்ந்திருந்தால் வைத்தியர்களாகவோ, சட்டத்தரணிகளாகவோ, பொறியியலாளர்களாகவோ அல்லது குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவோ உருவாகியிருப்பார்கள். இவர்களில் அநேகர் பலாத்காரமாகவும் அச்சுறுத்தப்பட்டும் கட்டாய பயிற்சிக்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள். அவர்களின் உயர்கல்வி கற்கும் பொன்னான வாய்ப்பை நாசமாக்கி விடுதலைப் புலிகள் என நாமம் சூட்டியதுமல்லாமல் இன்னும் 1400 பேர் கைது செயப்படவுள்ளார்கள் என இராணுவத்தின் உண்மைக்கு மாறான நிலைப்பாடு மிகப்பெரிய பாராதூரமான குற்றச்சாட்டாகும். Read the rest of this entry »

24 January 2013

சிறுபான்மையினரை பயப்பீதியில் ஆழ்த்தவே இலங்கை அரசு புலிப் பூச்சாண்டி காட்டுகிறதுகைது நடவடிக்கையை கைவிடவேண்டும் என்கிறார் சங்கரி

Courtesy: onlineuthayan.com
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்து இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் என 1400 பேர் உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன்.

அத்துடன் ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா என்று மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புகின்றேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஆனந்த சங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பதென பிறநாடுகளுக்கு கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகக் கூறி மூன்றரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் இந்த நாட்டில் எப்பகுதியிலும் விடுதலைப் புலிகள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை என நான் உறுதியாக நம்புகின்றேன்.

அப்படி ஒருசிலர் தப்பித்தவறி இருப்பின் அவர்களை கணக்கிலெடுக்கத் தேவையில்லை. ஏனெனில் கடந்த மூன்றரை ஆண்டுக்குள் ஒரு துப்பாக்கிச்சூட்டு சத்தம்கூடக் கேட்கவில்லை. அப்படியொரு உயிரிழப்பும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளை வேட்டையாடுவதாக கூறிக்கொண்டு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுமேயானால் எதுவித சம்பந்தமும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் தலைமறைவாக வாழ முற்படுவர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனின் அலுவலக பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த ஆபத்தான நடவடிக்கைக்கு முன்னோடியாகும்.

இவற்றை அடிப்படையாக வைத்து வடக்குக் கிழக்கில் படை பலத்தை பேணுவதற்கு அரசு முயற்சிக்கிறது. இராணுவ முகாம்களை புதிதாக அமைப்பது, பலப்படுத்துவது, போர் தளபாடங்களை கொள்வனவு செய்வது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் பேண அரசு விரும்புகிறது.

அதுமட்டுமல்ல சிறுபான்மை மக்களை நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ வைப்பதற்கு முயற்சிக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசு உடனடியாக விடுதலை செய்யவேண்டும். என்றுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=209951788124333055

22 January 2013

தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமன்:வீ.ஆனந்தசங்கரி!

Courtesy: neruppu.com
தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமனாகும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”காலத்தின் தேவைக்கமைய தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாக செயற்படும் நோக்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த கட்சிகள் அனைத்தும் சம பலத்துடனேயே இணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமையால் வேறு வழியின்றி தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டனவே அன்றி அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சிக்கு தனித்துவம் இருக்கவில்லை.

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனரே அன்றி தமிழரசுக் கட்சிக்கல்ல. இந்த அடிப்படையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுமாறு மக்கள்; அழுத்தம் கொடுத்தனர்.

சந்தர்ப்ப சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது சுயநோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்ற கூட்டுக் கட்சிகளின் வேட்பாளர்களை தமிழரசு கட்சியில் இணைத்தமையை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இரா. சம்பந்தன் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கை அமைகிறது.

இது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாய் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் அதன் அங்கங்களேயாகும்.

சில சுயநலவாதிகள் குட்டையை குழப்பி பருந்துக்கு இரையாக்காது தடுக்க சம்பந்தன் செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகியன முன்வந்ததேயொழிய தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்படுவதற்காக அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற ஓர் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற சம்பந்தனின் கோரிக்கைக்கு மக்கள் சார்பில் வரும் பதிலே இதுவாகும். 2004ஆம் ஆண்டுக்குப் பின் நடந்தேறிய அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மையாகும்” என்றார்.

http://www.neruppu.com/?p=69265#more-69265

9 January 2013

தமிழரசுக்கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து பங்கேற்க முடியாது! பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை

Courtesy: Thenee.com
தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையகத்தில் 29-12-2012 அன்று இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை

அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்மக்களின் இன்றைய நிலை முன்பு என்றும் இல்லாதவாறு மிக மோசமாகி இருப்பதோடு நிலைமை நாளுக்குநாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சாதிகார போக்கும், சுயநல நோக்கமும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த பொதுச்சபை கூட்டத்தில் உங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதே. எத்தனையோ அவமானங்களை எதிர்நோக்கிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாறாக செயற்படும் நோக்கம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இல்லை. தமிழ் மக்களின் இன்றைய இக்கட்டான நிலைமையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தொடர்ந்து தேவைக்கேற்றவாறு ஆதரவு வழங்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழரசுக்கட்சி தலைவர்களை பல்லக்கில் வைத்து பல்லக்கை சுமப்பவர்களாகத்தான் இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகியவற்றின் தலைமை செயற்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் மிகப் பொருத்தமாக இருப்பதால் 01-12-2011 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்களுக்கு நான் அனுப்பியிருந்த கடிதத்தை முழுமையாக தர விரும்புகின்றேன்.

அன்புள்ள சாம்,

உங்களுக்குப் பிடிக்காது போனாலும் மிகப் பொறுப்புணர்வோடு இக்கடிதத்தை எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும். இந்நாட்டு தமிழ்மக்கள் குறிப்பாக வடகிழக்கில் வாழ்பவர்கள் எதிர்நோக்கும் இருண்ட எதிர்காலம், நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலைமை, பிரச்சனைகள் விரிவாக அதிகரித்துவரும் இவ்வேளையில் ரோமாபுரி தீப்பற்றி எரியும் போது ரோம் சாம்ராச்சியத்தின் மன்னன் நீரோ வீணை வாசித்துக் கொண்டிருந்தது போல் நானும் நீங்களும் இருக்க முடியாது. தற்போதைய நிலைமையை உணர்ந்து, செய்வது என்னவென்று அறியாது தவிக்கும் தமிழ்மக்களின் குரலுக்கு செவிமடுத்து விழிப்படையும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஏனைய தமிழ் தலைவர்களோடு ஒப்பிடும் போது நானும் நீங்களும் அரசியலில் மிக முதிர்ந்தவர்கள் என்பதால் தமிழ் மக்களுக்கு முறையான தலைமையை வழங்க வேண்டிய கடமை எங்களுக்குண்டு. இதற்காக நான் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றேன். Read the rest of this entry »

31 December 2012

Government stating tigers resuming is fabricated Ananthashankari emphasize

Government stating that Tamil Eelam Liberation tiger’s movement has resumed is totally fabrication. By originating such erroneous opinion, government should curtail in shoving the Tamils to a dark era.

There is no necessity to provide psychosomatic resource consultation to the university students. They themselves will attend to their selves.

To retain the army’s presence, those connected with the students should guide them to abstain from getting involved in the activities which gives opportunity to the government was mentioned by Tamil Liberation Alliance Leader V.Ananthashankari at the Tamil Liberation Alliance annual general council meeting. Read the rest of this entry »

31 December 2012

புலிகள் மீண்டும் தலைதூக்குவதாக அரசு சொல்வதில் உண்மையில்லை; ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆனந்தசங்கரி

Courtesy: onlineuthayan.com Jaffna

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதாக அரசு கூறுவதில் எள்ளவும் உண்மையில்லை. இவ்வாறு தவறான கருத்தை உருவாக்கி அதன்மூலம் திரும்பவும் இருண்ட வாழ்வுக்குள் தமிழர்களை தள்ளுவதை அரசு நிறுத்த வேண்டும்.

அத்தோடு பல் கலைக்கழக மாணவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். தன்னுடைய இராணுவத்தின் இருப்பைத்தக்க வைப்பதற்காக அரசுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் மாணவர்கள் இறங்காதவாறு அவர்களுடன் தொடர்புடையவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்தார்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி.தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவை வருமாறு:
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் தான்தோன் றித்தனமாக முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

இதனை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கட்சி வலுவடைய வேண்டுமெனில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தாம் எடுக்கும் முடிவுகள் தங்கள் கட்சியை சார்ந்ததா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, வன்முறையின்றி பேச்_வார்த்தை மூலமும், இணக்கப்பாட்டுடனும், சமாதானமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்களுடனும், பல்வேறு இன, மத குழுக்களுடனும் நல்லுறவைப் பேணி வருகிறது.

இலங்கை வாழ் அனைத்து மக்களையும் சமாதானத்துடனும், ஜனநாயக மனிதாபிமான அடிப்படையில் உரிமைகளை அநுபவிக்க உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துகின்றது.

விடுதலைப் புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை. அவ்வாறு தெரிவித்து மக்களைத் தொந்தரவு செய்து மீண்டும் இருண்ட வாழ்வுக்குள் செல்வதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளக்கூடிய தகுதியுடையவர்கள். மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட எவரும் அர_ இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்கவும், நியாயப்படுத்தவும், வாய்ப்பளிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒற்றையாட்சியின் கீழ் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும். இந்தக் கருத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுதியாக உள்ளது. என்பன போன்ற விடயங்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

http://onlineuthayan.com/News_More.php?id=639491736131698096

14 December 2012

போராட்டங்களை மேலும் பலமாகவும் பரந்தும் விரிவுபடுத்த வேண்டியுள்ளது! மாவை எம்.பி.

Courtesy: TamilDailyMirror.lk
(நவரத்தினம்)

‘மற்றவர்களை குடியேற்றுவதன் மூலம் தமிழர்களின் அடையாளத்தையே இல்லாமல் செய்யும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஆகையால் தான் எமது போராட்டங்களை இன்னும் மிக பலமாகவும் பரந்தும் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்குமாறு கோரிய ஆக்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தம் உரையாற்றிய அவர்,

‘கடந்த சில மாதங்களாக எமது தேசத்திலே இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் அகற்றப்பட்டாலே மீள்குடியேற்றங்கள் இடம்பெறும் என்பதனை வலியுறுத்தி நாம் அஹிம்சை வழியிலான போராட்டங்களை நடத்திவருவதை உலகம் நன்கு அறியும்.

ஆயிரம் ஆயிரம் ஏக்கர் எமது நிலங்களையும் எமது வீடுகளையும் அழித்தது மட்டமல்லாது அதற்குமப்பால் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்திருப்பதை நாம் தீவிரமாக எதிர்த்து நிற்கின்றோம். இன்று அரசாங்கத்தை பார்த்தால் தமது பெரும்பான்மை பலம் என்பதை வைத்துக்கொண்டு எல்லாத் துறைகளிலும் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்ற ஓர் உச்சக்கட்டத்தை நீதித்துறையில் ஆக்கிரமித்துள்ளதையும் நாம் இன்று காணக்கூடியதாக உள்ளது.

இன்று எமது கோரிக்கை இந்த வன்னி மாவட்டத்திலே எமது மக்கள் ஆயிரமாக திரண்டு நின்று ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும். ஜனநாயக சக்திகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இதற்கு செவிசாய்க்காது விட்டால் தொடர்ந்தும் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியும் தீவிரப்படுத்த வேண்டியும் இருக்கும்.

இதனையும் விட எமது இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றத்தை இந்த இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். புதிதாக எமது தமிழ் நிலத்தை வேற்று இனத்தவர்களுக்கு விற்கின்றார்கள், அபகரிக்கின்றார்கள். எமது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும், எமது நிலங்களில் எமது மக்கள் குடியேற்றப்பட வேண்டும்.

எமது மக்கள் தமது வீடுகளிலும் தமது மண்ணிலும் வாழ வேண்டும். தமது மண்ணிலே தமிழ் மக்கள் ஆள வேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியாகவும் அஹிம்சை ரீதியாகவும் எமது மக்களை அணிதிரட்டி பலமாகவும் பரந்துபட்டும் விரிவுபடுத்தி போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்’ என்றார்.

சிவசக்தி ஆனந்தன் எம்.பி உரையாற்றுகையில்,

‘இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கை சாவதேச சமூகம் கவனத்தில் எடுத்து எமக்கு நீதியை பெற்று தரவேண்டும். இவ்வாறான போராட்டத்தை வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் அரசியல் கட்சிகளும் தென்னிலங்கை முற்பொக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக வன்னி மாவட்டத்தில் அண்மையில் ஜனாதிபதியின் விசேட செயலணியின் செயலாளர் திவாரட்ன வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் 3,000 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகளை வெட்டி வெளி மாவட்டங்களை சேர்ந்த புதியவர்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறைகளில் இருந்தும் புனர்வாழ்வு பெற்று வந்தவர்களும் மீண்டும் கைது செய்யப்படும் நிலைமைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கண்டித்தே நாம் போராட்டங்களை நடத்துகின்றோம்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு இங்குள்ள இராணுவமே பொறுப்பாகவுள்ளது. அதுவே காரணமாகவுமுள்ளது. ஆகவே வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ மற்றைய கட்சிகள் உட்பட தமிழ் மக்களுக்கோ மாற்று கருத்தில்லை’ என்றார்.

புளொட் தலைவர் சித்தார்த்தன் உரையாற்றுகையில்,

‘இந்த அரசு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கொண்டுவருவதாக கூறிக்கொண்டு முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே மாணவர்கள் தமது உடன்பிறப்புகளை நினைத்து அந்நாளை அனுஸ்டிக்கும்போது பல்கலைக் கழகத்தினுள்ளே புகுந்து மாணவர்களை அடித்ததுடன் அவ்வாறான செயல்கள் மூலம் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவது மாத்திரமல்ல வடக்கு கிழக்கை தாம் ஆக்கிரமித்திருப்பதை சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் தமது சமூகத்திற்கும் காட்டும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றது.

இவைகள் அனைத்தும் நிற்பாட்டப்பட வேண்டும். கடந்த காலங்களில் இப்படியான செயற்பாடுகள் இந்த நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியதை மறந்துவிடக்கூடாது. எனவே கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும்’ என்றார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உரையாற்றுகையில்,

‘இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருகாலத்தில் தரப்படுத்தல்; என்ற விதத்தின் அடிப்படையிலே மாணவர்களை நசுக்க நினைத்ததினால் புரட்சி வெடித்தது. இவ்வாறான நிலை காரணமாக எங்களுடைய இனம் கிளர்ந்தெழுந்து தமது எழுச்சியையும் போராட்டத்தையும் சிறப்பாக பல தியாகங்களுக்கு மத்தியில் செய்து முடித்துள்ளது.

இன்றைக்கு இந்த அரசு தமிழர்களுடைய சுய கௌரவத்தையும் சுயநிர்ணயத்தையும் தட்டிப்பார்க்கின்ற நிலைக்கு இறங்கியிருக்கின்றது. தமிழர்களை கிள்ளுக்கீரை என்று நினைக்கும் அளவிற்கும் அடிமைத்தனம் என்று நினைக்கும் தன்மையிலும் செயற்படுகின்றது. இதை நாம் உடைத்தெறியும் தன்மை கொண்டவர்களாக மாறவேண்டும்.

இந்த அரசாங்கம் செய்யும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் இராணுவம் செய்யும் அத்தனை கொடுமைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும். எமது நிலத்தை அபகரிக்கின்ற எமது மதங்களை உடைத்தெறிகின்ற, எமது மாணவர்களை கைது செய்கின்ற தன்மைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் வகையில் எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.

இனியும் அரசு தமிழர்களை சீண்டிப்பார்க்கின்ற தன்மைக்கு அனுமதிக்க முடியாது. தமிழர்கள் சுயகௌரவத்துடனும் சுயநிர்ணயத்துடனும் வாழுகின்றனர் என்பதனை எமது ஜனநாயக போராட்டங்கள் மூலமாக உலக நாடுகளுக்கு காட்டுவதனூடாக நாம் சளைக்கமாட்டோம். எமது இனம் மீண்டு எழும் என்கின்ற செய்தி சென்றடைய வேண்டும்’ என்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில்,

‘எமது மத்தியில் ஒற்றுமையில்லை என்று சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். எங்கள் மத்தியில் ஒற்றுமை வரும் வரைக்கும் எங்களால் ஒரு அடிகூட நகரமுடியாது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன்.

இன்று இங்கு பல விதமான கோசங்கள் எழுப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான கோசங்கள் இங்கு சிலருக்க புதுமையாக இருந்தாலும் இது 40 ஆண்டுகாலமாக திரும்பத்திரும்ப ஒலித்தகோசங்கள். ஆகவே 40 ஆண்டுகளாக இவ்வாறான கோசங்கள் எழுப்பப்படுவதாக இருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக உள்ள பிரச்சினை.

இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். கடந்த இரண்டாண்டு காலமாக நான் எனது கட்சி செயற்பாடுகளை ஒதுக்கி விட்டு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்று செயற்பட்டு வருகின்றேன்.

அண்மையில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது என்று எனக்கு தெரியாது. எனவே சிலர் சில குறிக்கோளை வைத்து அரசியல் செய்யமுடியாது. இன்று எமக்கு அரசியல் அல்ல ஜீவாதார பிரச்சனையே உள்ளது. யாழ்ப்பாணத்திலும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதுவும் எனக்கு தெரியாது. நான் நூற்றுக்கு நூறு வீதம் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடாது 50 ஆண்டுகால அரசியலில் இருக்கின்றேன்.

அதனால் என்ன என்ன நடக்கின்றது. என்ன என்ன நடக்கபோகின்றது என்பதை அறிந்தவன். இன்று உங்களை உற்சாகமூட்டுவதால் மாலை உங்கள் வீடுகளுக்கு இராணுவம் வரலாம். ஏனெனில் இங்கு சிலர் மிக வேகமாக கோசம் எழுப்பினார்கள். அந்த வீரம் இந்த இடத்திலே நிற்கப்போவதில்லை. அதற்கு சோதனை வரப்போகின்றது.

அது இன்று மாலையோ, இரவோ அல்லது நாளையோ ஆக இருக்கலாம். அன்றில் இருந்து இதுதான் நடக்கின்றது. நான் எத்தனையோ இளைஞர்களின் மரண வீடுகளுக்கு சென்றிருக்கின்றேன். அவ்வாறானவர்கள் சிறிய குற்றம் செய்தவர்கள். உண்மையில் பெரிய குற்றம் செய்தவர்கள் தப்பி விடுவார்கள். மக்களை தூண்டிவிட்டு இப்படி சொல் அப்படி சொல் என்று கூறி முன்னின்று நடத்தியவர்கள் மறைந்து விடுவார்கள்.

இவ்விடத்தில் கைதட்டல் பெறுவது அல்ல சிறப்பு. நான் இவ்விடத்தில் நீங்கள் தொடர்ந்து கை தட்டிக்கொண்டிருக்கும் அளவிற்கு பேச முடியும். ஆனால் கைதட்டலுக்காக பேசுபவன் அல்ல நான். எங்களுக்கு பிரச்சனை இருக்கின்றது. நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம். தினம் தினம் நாம் அடிமைப்பட்டுகொண்டிருக்கின்றோம்.

இன்று அரசாங்கம் 2500 பேருக்க வேலை கொடுத்துள்ளது. 18,000 ரூபா சம்பளம் யார்தான் விடுவான். 100 பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்து இன்று 15 பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்யவேண்டிய போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் அங்கே இருக்கின்றது. அவ்வாறான நிலைகளுக்குதான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இன்று சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் நாம் கூடவில்லை. எமது இனத்திற்காக இடம்பெறும் இந்த போராட்டங்களில் கலந்துகொள்ளும் தலைவர்களில் அவர் ஒரு தலைவரே தவிர அவரது தலைமையில் இங்க கூடவில்லை. வேறு எவரது தலைமையிலும் கூடவில்லை. தலைமைப்பதவிகள் எல்லாம் போய்விட்டது. தலைவர்களாக இருந்தவர்கள் எல்லாம் மண் கவ்வி விட்டார்கள். இன்றைக்கு நாம் எல்லோரும் தலைவர்களாக உள்ளோம். எல்லாரும் மன்னர்கள் என்பதுபோல். எமக்கும் பொறுப்புகள் இருக்கின்றது.

இந்த போராட்டம் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது, படம் பிடித்தார்கள், பேசவிட்டார்கள், படம் பத்திரிகையில் வந்துவிட்டது. இது அல்ல போராட்டம். நான் கோட்பது எமக்குள்ள பிரச்சனை என்ன என்பதை நாம் இருந்து பேச வேண்டும். அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பில். கே.பி. என்பவரை அரசாங்கம் கொண்டு வந்து போட்டுள்ளது. யார் இந்த கே.பி.யாராவது கேள்வி கேட்டார்களா?. அரசாங்கத்தின் எடுபிடிகளாக பலர் இருக்கின்றார்கள் அவர்களே ஜென்ம விரோதிகள்’ என்றார்.
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா உரையாற்றுகையில்,

‘இந்த அரசாங்கம் மிக மோசமான செயற்பாட்டை நிகழ்த்தி வருகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அதுவும் தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியவர்களை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவதற்கு ஆயுதமா ஏந்தினார்கள்.

எதற்காக அப்பாவி மாணவர்கள் மீது புலி சாயம் பூசப்படுகின்றது. எமது மாணவர்கள் கற்றது குற்றமா? கற்றதனால் முன்னேறியது குற்றமா? முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு, கல்வி கற்கும் மாணவர்களுக்கும் புனர்வாழ்வு. என்ன சொல்கின்றது இந்த அரசு.

இதேவேளை எமக்குள் உள்ள பொது பிரச்சினைகளை சந்தியில் வைத்து பேச வேண்டிய தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய நாம் இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறும் எமது மக்களுக்கான பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றோம் என்றால் அது ஓரணியில் நாம் நிற்பதனால் தான்.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவம் இருக்கும் அதனை இழக்கமுடியாது. எமது பிரச்சனைகளை மூடிய அறையில் இருந்து பேசி முடிவெடுப்போம். பொது இடத்தில் அவற்றை பேசி எம்மை நாமே தரம் குறைக்கும் செயற்பாடுகளை விடுத்து ஓரணியாக எமது போராட்டங்களை முன்னெடுப்போம்’ என தெரிவித்தார்.
http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/54789-2012-12-14-13-12-43.html

23 October 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளக கருத்து வேறுபாடுகள் எனும் நோயால் பீடிக்கப்பட்டுள்ளது - டி.பி.எஸ் ஜெயராஜ்

Courtesy: Thenee.com

(”இந்தக் காட்சியில் மிகவும் ஏமாற்றம் தருவதாக இருந்தது வீரசிங்கம் ஆனந்தசங்கரியை தவிர்ந்த ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கத்தவர்களின் இழிவான அடிமைத்தனம்தான். ஆனந்தசங்கரி தனது சக தோழர்களின் மிக மோசமான காட்டிக் கொடுக்கும் செய்கைகளினால் தனிமைப்படுத்தப்பட்டு பாதிப்புக்கு உள்ளானார். சங்கரியும் எல்.ரீ.ரீ.ஈக்கு முன்னால் தலை தாழ்த்தி புலிகளின் கைப்பொம்மையாக இயங்குவதற்கு தயாராக இருந்திருந்தால், ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை ஏற்றுக்கொண்ட அதேவழியில் அவரையும் புலிகள் அணைத்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

ஆனந்தசங்கரி

அன்ரன் பாலசிங்கம், ஊடகங்களுக்கு ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் விருப்பத்துக்கு ஏற்பவே நடக்கிறார்கள் மற்றும் விரைவில் தங்கள் கட்டளைகளை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட இருக்கிறார்கள் என்று சொல்லியதுதான் பெரிய திருப்பமாக அமைந்தது. ஏனைய ரி.என்.ஏ அங்கத்தவர்கள் ஒரு துளியளவாவது எதிர்ப்பினை வெளிக்காட்டாமல் இருந்த அதேவேளை, சங்கரி, பாலசிங்கத்தின் இந்த மாதிரியான ஆணவப்போக்கான வெளிப்பாட்டை பகிரங்கமாக விமர்சித்து கடுமையான கண்டனங்களை வெளியிட்டார். ஆனால் இதர ரி.என்.ஏ மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கத்தவர்கள் பகிரங்கமாக சங்கரிக்கு பின்துணை வழங்கவில்லை ,ரவிராஜ் போன்ற சிலர் மட்டும் தனிப்பட்ட முறையில் அவரைப் பாராட்டியிருந்தார்கள். ஆனால் பாலசிங்கம் பெரும் சீற்றம் அடைந்தார்.

விரைவிலேயே சங்கரியை தவிர்ந்த ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டார்கள், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியற் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன் சங்கரியை கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கும்படி கட்டளை பிறப்பித்தார். எல்.ரீ.ரீ.ஈ கட்டளையின் நீதியின்மையை உணர்ந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணிப் பிரமுகர்கள் காரியத்தை தள்ளிப்போடும் வகையில் சங்கரியை அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தொடர்ந்தும்; முட்டுக்கட்டையானது. ஆனால் சங்கரியை வெளியேற்றவேண்டும் என்பதில் தமிழ்ச்செல்வன் பிடிவாதமாகவே இருந்தார். பின்னர் சங்கரியை வெளியேற்றவேண்டும் என்று தானும் விரும்புவதாக பிரபாகரனும் வெளிப்படுத்தினார். சங்கரியின் கீழ்படிய மறுத்தலினால் கோபமுற்ற எல்.ரீ.ரீ.ஈ, அதை மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக்க விரும்பியது. இறுதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை, ஆனந்தசங்கரிக்கு எதிராக வாக்களித்தது, இந்த நடவடிக்கையை மனித உரிமைகளுக்கான யாழ்பாண பல்கலைக்கமக ஆசிரியர் சங்கம், பிணங்களின் நடமாடும் செயற்பாடு என விவரித்திருந்தது.

எனினும் சங்கரி சட்ட நடவடிக்கையை மேற்கொண்டார், விஜயதாஸ ராஜபக்ஸ அவருக்காக வாதாடினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த சங்கரி நீக்கப்பட்டதை நீதிமன்ற தீர்ப்பு தடை செய்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசுவாசமான சில அங்கத்தவர்கள் மட்டும் ஆனந்தசங்கரியின் கீழுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியில் நீடித்திருந்த அதேவேளை ஏனைய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ரி.என்.ஏ யின் கட்டமைப்பின் கீழ் செயற்பட ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து இந்தக் கூறுகள் தங்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ் ஒன்றிணைத்துக்கொண்ட அதேவேளை ஆனந்தசங்கரி தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை கைப்பற்றிக் கொண்டார், ஆனால் அளவிலும் தாக்கத்திலும் அக்கட்சி மெல்ல மெல்ல அழிந்து வந்தது.

தங்களுக்கு கீழ்படிய மறுத்ததின் விலை என்னவென்று சங்கரி விவகாரத்தினூடாக ரி.என்.ஏ க்கு பாடம் கற்பித்த எல்.ரீ.ரீ.ஈ, ரி.என்.ஏ மீதான தனது பிடியை மேலும் தீவிரமாக்கியது. தாங்கள்தான் எசமானார்கள் என்பதை ரி.என்.ஏக்கு காண்பிப்பதில் எல்.ரீ.ரீ.ஈயினர் வெற்றி பெற்றிருந்தார்கள். அடுத்து வந்த சில வருடங்களும் ரி.என்.ஏ முற்றாக எல்.ரீ.ரீ.ஈயினரின் அடிமைகளாக மாறிவிட்டனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

ரி.என்.ஏ கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ள ஒரு தளர்வான கூட்டணியாக இருந்தது, ஆனால் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டையும் புலிகளே நிறுவத் தொடங்கிய பின்னர் அவர்களால் இந்த ஐக்கியத்தை வலிமையான ஒரு ஒற்றைக் கட்டமைப்பாக மாற்ற முடிந்தது. ரி.என்.ஏ யினை கட்சி யாப்பு மற்றும் கட்டமைப்பு என்பனவற்றைக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்திருக்க முடியும். ஆனால் எல்.ரீ.ரீ.ஈயினர் அப்படிச் செய்யவில்லை உண்மையில் ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எப் என்பனவற்றால் அப்படியான பிரேரணைகள் முன் வைக்கப்;பட்டபோது அவர்கள் அதை தடுத்து வந்தார்கள். ரி.என்.ஏ அங்கத்தவர்கள் ஒரு நிரந்தரமான கூட்டணியாக மாறுவதைக் காட்டிலும் தனித்தனி கட்சிகளாக இருப்பதையே புலிகள் விரும்பினார்கள்.”) - டி.பி.எஸ் ஜெயராஜ் Read the rest of this entry »

About

author
Anandasangaree

Read more...



Monthly Archives

Links